Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Wednesday, April 15, 2009

இனி உடல் குறைய ஓட வேண்டம் பேசுவோம் ...


செல்போன் என்றாலே தகவல் தொடர்பு சாதனம் என்பது தான் இதுவரை நமக்கு ஞாபகத்துக்கு வரும்.ஆனால் இனிமேல் அதை ஒரு எடை குறைக்கும் சாதனம் என்றும் சொல்ல வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?,உண்மை தான்.உடல் பருத்து அவதிக்குள்ளாகும் சிலரின் நிலையை கவனத்தில் கொண்ட விஞ்ஞானிகள் எடையைக்குறைக்கும் செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் பிரிகொம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இது மாதிரியான வித்தியாசமான செல்போனை கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
தங்களது கண்டுபிடிப்பு குறித்து கூறும் விஞ்ஞானிகள் நிறைகூடியவர்களுக்கு மட்டுமல்லாது உடலை எப்போதும் மெல்லியதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் இந்த செல்போன்வரப்பிரசாதமே என்கின்றனர்.விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடித்துள்ள எடை குறைக்கும் செல்போனை 120 பேரை பயன் படுத்த வைத்து சோதனை நடத்தினர்.
இதில் அனைவரது உடல் எடையும் செல்போனை பயன் படுத்துவதற்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைந்தது.சில பெண்கள் தாங்கள் விரும்பியவாறு மெலிந்து அழகு தேவதைகளாகினர்.இந்த நவீன ரக எடை குறைக்கும் செல்போனை ஒருவர் பயன்படுத்தும் போது பசி குறைந்து உடலில் வளர்ச்சியில் மாற்றம் துரிதமாக நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: