Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Thursday, May 28, 2009

முழிச்சுக்கோ தேநீர் குடிச்சுக்கோ இதய நோயகுறைச்சுக்கோ ...


தினமும் தேநீர் குடியுங்கள்: இதய நோயைத் தவிர்க்கலாம்

தினமும் 3 கோப்பை தேநீர் குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ரக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் இது குறித்து அவர் கூறியுள்ளது:

தினமும் 3 கோப்பை டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இது தவிர இதய நோய் முக்கியமாக மாரடைப்பு வரும் வாய்ப்பும், வலிப்பு நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் குறைகிறது.

தினமும் 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது.

ஏற்கெனவே பிரான்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் டீ குடித்து வந்த பெண்ணுக்கு 32 சதவீதம் வரை இதய நோய் வர வாய்ப்புகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

டீ குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார் கேரி ரக்ஸ்டன்.

இனி நண்பர் டீ குடிக்க அழைக்கும் போது மறுக்காமல், உடன் செல்வது உடல் நலத்துக்கும் நல்லது.


நன்றி :wordpress

Saturday, May 16, 2009

Kannathil Muthamittal - Vidai Kodu Engal

ஒவ்வொரு தமிழனுன் பார்க்க வேண்டியவை

Prem Gopal's performance on Eelam Tamils - Part 2(Vijay TV)

ஒவ்வொரு தமிழனுன் பார்க்க வேண்டியவை

Prem Gopal's performance on Eelam Tamils - Part 1(Vijay TV)

ஒவ்வொரு தமிழனுன் பார்க்க வேண்டியவை

Wednesday, May 13, 2009

Cow Fight

Friday, April 24, 2009

செல்போன ஐயோ வேண்டாம் !

செல்போனில் அதிக நேரம் பேசுவதால், உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

இணைய தளம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்படையில், செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மிகக் குறைந்த திறன் கொண்டதுதான் என்றாலும், அதிக நேரம் காதுகளில் வைத்து பேசிக் கொண்டிருப்பதால் ஏராளமான உபாதைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளை நரம்புகள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தவிர எண்ணற்ற உடல் நலம் தொடர்பான நோய்களும் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி அந்த தகவல் கூறுகிறது.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக நேரம் செல்போனில் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இல்லாதவாறு பாதுகாத்துக் கொள்தல் அவசியம். அதில் செல்போன் கதிர்வீச்சும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அந்த தகவல், தேவைப்பட்டால் மட்டும் கர்ப்பிணிப் பெண்கள் செல்போன்களில் பேசலாம் என்று தெரிவிக்கிறது.

தவிர, சாலைகளில் செல்லும்போது சிலர் செல்போன்களில் பேசியவாறே நடந்து செல்வதும், எதிரே வரும் வாகனங்களைப் பார்க்காமல் சாலைகளைக் கடத்தல், ரயில் தண்டவாளங்களைக் கடத்த்ல் போன்றவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன.

தவிர, சிலர் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவாறே செல்போனிலும் பேசிக் கொண்டிருப்பர். மறுமுனையில் பேசுபவர் என்ன மாதிரியான விஷயம் பற்றி பேசுகிறாரோ, அதனை பொருத்து வாகனத்தில் செல்பவரின் சாலை மீதான கவனம் சிதறக் கூடும். எனவே செல்போன் என்பது தகவல்களை பரிமாறிக் கொள்ள மட்டுமே என்பதை ஆண்/பெண் என இருபாலரும் உணர வேண்டும்.

கூடிய வரை சாலைகளில் செல்லும் போது பேசுவதைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு, பேசி முடித்த பின் செல்லலாம்.

தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். வாழ்க்கையை தொலைத்தால், மீண்டும் பெற முடியுமா? என்பதை, அவர்கள் உணர வேண்டும்.

நன்றி வெப்துனியா

கொழுப்பு குறைய கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க...


உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.

இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.